Wednesday, 24 August 2022

ஓவியம் 🌈🌈🌈

எல்லா 
நவீன  ஓவியங்களும்
ஏனோ
உன் சாயல் 
இல்லாமல்
வரைய முடிவதில்லை
எந்த ஓவியனாலும் 🌈🌈🌈

சிலை நகர்தல்!!!

இங்கு 
ஆச்சரியப்பட ஒன்னுமில்லை
சிலைகள் இருக்குமிடத்தில்
தானே
நீ இருக்குறாய்...
கவலைப்படாதே,
அடுத்த முறை 
நீ இருக்குமிடத்தில்
சிலைகளை 
நகர்த்திவிடுகிறேன் ❤❤❤

~ பிரபுகுரு

அழகரும்!!! அழகியும்!!!

அழகர் 
ஆற்றில் இறங்குகிறார் 
என்று கத்திக்கொண்டு பிராத்தனை
பண்ணும் பத்தனுக்கு நடுவில் 
கூட்டத்தில் இடித்ததுக்காக 
வருந்தி பார்த்த 
அந்த ஓர பார்வையில் 
அழகி இதயத்தில் 
இறங்கிவிட்டாள்...

மழை...

யாருமற்ற கோவிலில் 
உனக்காக 
காத்திருக்கும் போது 
"பெய்கின்ற மழையாய்"
 மட்டும்,
எனோ
ரசிக்க முடிவதில்லை!!! 

Tuesday, 3 April 2018

மரணம் ...

என்னை
கண்டும் காணாமல்
போகும்,
உன்
ஒவ்வொரு பார்வையும்
ஒரு கோடி மரணங்களுக்கு
"சமம்"...


கண்ணாடி

கண்ணுக்கு மையிட்டு
பார்க்கையில்
விக்கித்து
கொள்கின்றன,
உன் வீட்டு 'கண்ணாடி'...

Thursday, 18 January 2018

சமநிலை


நாம் இருவர் கை கோர்த்து
ரயில் தண்டவாளத்தில்
நடந்தப்போது
நம் காதல்
"சமநிலை" அடைந்தது...